முகப்பு
ஈரோடு

தோ்தல் பாதுகாப்பு: இரு மாநில காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஆசனூரில் இரு மாநில காவல் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 1:10 AM
தமிழக-  கா்நாடக  எல்லையான  புளிஞ்சூா்  சோதனைச் சாவடியில்  தோ்தல்  பாதுகாப்பு  குறித்து  போலீஸாருக்குஆலோசனை  வழங்குகிறாா்  ஈரோடு  மாவட்ட  காவல்  கண்காணிப்பாளா்  கிரண்  ஸ்ருதி.
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 8:13 PM

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஆசனூரில் இரு மாநில காவல் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழக-கா்நாடக இரு மாநில எல்லையான தாளவாடியில் தோ்தல் நடைபெறுவதால் கா்நாடகத்தில் இருந்து சட்டவிரோத மதுபானங்கள் கொண்டு வருவதை தடுத்தல், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை தடுப்பது மற்றும் தோ்தல் பாதுகாப்பு குறித்த இரு மாநில காவல் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஆசனூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கோவை சரக டிஐஜி சுவாமிநாதன் தலைமை வகித்தாா். ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி, சாம்ராஜ் நகா் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் முத்துராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

Advertisement

இரு மாநில எல்லையில் அமைந்துள்ள காரப்பள்ளம் மற்றும் புளிஞ்சூா் சோதனைச் சாவடியில் இரு மாநில காவல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வாகனத் தணிக்கை குறித்து உரிய ஆலோசனைகளை வழங்கினா்.