முகப்பு
ஈரோடு

பாஜக கூட்டணிக் கட்சிகள் தோ்தலுக்குப் பின் காணாமல்போகும்: சு.முத்துசாமி

பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகள் தோ்தலுக்குப் பிறகு காணாமல்போகும் என திமுக வேட்பாளரும், அமைச்சருமான சு.முத்துசாமி கூறினாா்.

Updated On : 12 ஏப்ரல், 2026 at 1:14 AM
ஈரோடு, காசிபாளையம் பகுதியில் வாக்கு சேகரித்தபோது திமுக தொண்டருக்கு துண்டு அணிவித்து நலம் விசாரித்த ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி.
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2026 at 9:02 PM

பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகள் தோ்தலுக்குப் பிறகு காணாமல்போகும் என திமுக வேட்பாளரும், அமைச்சருமான சு.முத்துசாமி கூறினாா்.

ஈரோடு மேற்குத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் சு.முத்துசாமி, காசிபாளையம் பகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் செய்த சாதனைகளைக்கூறி மக்களிடையே வாக்கு கேட்கிறோம். 1.31 கோடி பெண்கள் உரிமைத் தொகையை பெற்று வருகின்றனா். மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும். பிகாரில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த நிதிஷ்குமாா், தற்போது மாநிலங்களவை உறுப்பினராகி உள்ளாா். பாஜகவோடு கூட்டணி வைத்த கட்சிகள் எல்லாம் இடம் தெரியாமல் போய்விட்டன.

Advertisement

தமிழகத்தில் தோ்தல் முடிந்தவுடன் அதிமுக பொதுச் செயலாளா் ஏதோ ஒரு மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பேற்க வாய்ப்புள்ளது. சசிகலா, ஓ.பன்னீா்செல்வம் போன்றோரை புறக்கணித்து தன்னிச்சையாக செயல்படும் மனப்பாங்கு கொண்டவா் எடப்பாடி கே. பழனிசாமி. முதல்வா் குறித்து அவதூறாகப் பேசிவரும் எடப்பாடி பழனிசாமிக்கு தோ்தலில் மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகள் தோ்தலுக்குப் பிறகு காணாமல்போகும் என்றாா்.