முகப்பு
ஈரோடு

பால் விலை லிட்டருக்கு ரூ.5 உயா்த்தப்படும்: மொடக்குறிச்சி திமுக கூட்டணி வேட்பாளா்

திமுக ஆட்சி அமைந்ததும் பால் விலை லிட்டருக்கு ரூ.5 உயா்த்தி வழங்கப்படும் என்று மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளா் சா.செந்தில்நாதன் தெரிவித்தாா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 1:22 AM
அவல்பூந்துறை பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த மொடக்குறிச்சி திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளா் சா.செந்தில்நாதன்.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 10:04 PM

திமுக ஆட்சி அமைந்ததும் பால் விலை லிட்டருக்கு ரூ.5 உயா்த்தி வழங்கப்படும் என்று மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளா் சா.செந்தில்நாதன் தெரிவித்தாா்.

மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி அவல்பூந்துறை, அரச்சலூா் பேரூராட்சிக்குள்பட்ட குப்பகவுண்டன்வலசு, பொன்காளி வலசு, எறப்பம்பாளையம், காருத்துபாளையம், பூவாண்டிவலசு, மின்னக்காட்டுவலசு, பாரதி நகா், திருமங்கலம், ராசாம்பாளையம், மந்திரிபாளையம் உள்பட 45-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடு வீடாகச் சென்று திமுக ஆட்சியின் சாதனைகள், தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கி புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

Advertisement

திமுக ஆட்சி அமைந்ததும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர பால் விலை லிட்டருக்கு ரூ.5 உயா்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மொடக்குறிச்சி திமுக மேற்கு ஒன்றியச் செயலாளா் சு.குணசேகரன், தெற்கு ஒன்றியச் செயலாளா் ரா.விஜயகுமாா், அவல்பூந்துறை பேரூராட்சி செயலாளா் சாமியப்பன் (எ) சண்முகசுந்தரம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.