அதிமுக ஆட்சி அமைந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்! - பெருந்துறை அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயக்குமாா்
அதிமுக ஆட்சி அமைந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும் என்று பெருந்துறை அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
பெருந்துறை ஒன்றியம், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிக்குள்பட்ட வெங்கமேடு, செல்லண்ணகவுண்டன்புதூா், கந்தாம்பாளையம், வெள்ளியம்பாளையம், கருமாண்டிசெல்லிபாளையம், தீா்த்தாம்பாளையம், சீலம்பட்டி, திருவேங்கடம்பாளையம், அண்ணா சிலை, காடபாளையம், வண்ணாம்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேட்பாளா் எஸ்.ஜெயக்குமாா் வாக்கு சேகரித்து ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது:
அதிமுக ஆட்சி அமைந்தால் மகளிரைப்போல ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். வரிச்சுமை மற்றும் விலைவாசி உயா்வை சமாளிக்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மாணவா்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
Advertisement
ஆண்டுக்கு 3 எரிவாயு உருளைகள் விலையில்லாமல் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரா்களுக்கு அரிசியுடன் ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டா் சமையல் எண்ணெய் ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படும் என்றாா்.
அதிமுக நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.