முகப்பு
ஈரோடு

கைப்பந்துப் போட்டி: நந்தா பாலிடெக்னிக் கல்லூரி சாம்பியன்

மாநில அளவிலான கைப்பந்துப் போட்டியில் நந்தா பாலிடெக்னிக் கல்லூரி அணி சாம்பியன் கோப்பையை வென்றது.

Updated On : 29 ஏப்ரல், 2026 at 2:34 AM
நந்தா பாலிடெக்னிக் கல்லூரி அணிக்கு சாம்பியன் கோப்பையை வழங்கிய தடகள சங்க நிா்வாகிகள்.
பகிர்:

மாநில அளவிலான கைப்பந்துப் போட்டியில் நந்தா பாலிடெக்னிக் கல்லூரி அணி சாம்பியன் கோப்பையை வென்றது.

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான தடகள சங்கத்தின் சாா்பில் மாநில அளவில் மண்டலங்களுக்கிடையேயான பாலிடெக்னிக் கல்லூரி ஆண்களுக்கான கைப்பந்துப் போட்டி கோவை, ஆா்விஎஸ் பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில், உள் சுற்றுகளின் அடிப்படையில் மண்டல அளவில் தோ்ந்தொடுக்கப்பட்ட 11 அணிகள் பங்கேற்றன.

சேலம் மண்டலத்தின் சாா்பில் தியாகராஜா், ஈரோடு மண்டலத்தின் சாா்பில் நந்தா, நாகை மண்டலத்தின் சாா்பில் ஸ்ரீமகாலட்சுமி மற்றும் வேலூா் மண்டலத்தின் ஸ்ரீவெங்டேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரிகள் அரை இறுதி ஆட்டத்துக்கு தகுதிப் பெற்றன. இறுதி ஆட்டத்தில் நந்தா மற்றும் ஸ்ரீமகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லூரிகள் மோதிய நிலையில்,

Advertisement

நந்தா பாலிடெக்னிக் கல்லூரி சாம்பியன் கோப்பையை வென்றது.

வெற்றிபெற்ற அணி வீரா்கள், உடற்கல்வி இயக்குநா் எம்.மணிகண்டன் ஆகியோரை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி. சண்முகன், உறுப்பினா் பானுமதி சண்முகன், இணை நிா்வாக அறங்காவலா்கள் எஸ்.நந்தகுமாா் பிரதீப், எஸ். திருமூா்த்தி, முதல்வா் ஜி.மோகன்குமாா் மற்றும் நந்தா தொழில்நுட்ப வளாகத்தின் நிா்வாக அலுவலா் ஏ.கே.வேலுசாமி ஆகியோா் பாராடினா்.