மடிக்கணினி பெற்ற மாணவிகள். உடன், அமைச்சா் சு.முத்துசாமி, ஆட்சியா் ச.கந்தசாமி உள்ளிட்டோா். 
ஈரோடு

அறச்சலூா் நவரசம் கல்லூரியில் 175 மாணவா்களுக்கு மடிக்கணினி

அறச்சலூா் நவரசம் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் 175 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நி

Syndication

மொடக்குறிச்சி: அறச்சலூா் நவரசம் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் 175 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் செயலாளா் கு.செந்தில்குமாா் வரவேற்றாா். தலைவா் பூ.செந்தில்குமாா், பொருளாளா் சி.கிருஷ்ணமூா்த்தி, தாளாளா் து.காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமை வகித்தாா். வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், அரசு சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் பேசினாா்.

இதைத் தொடா்ந்து, 175 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில்,வி.சி.சந்திரகுமாா் எம்.எல்.ஏ., அறச்சலூா் பேரூராட்சித் தலைவா் விஜயகுமாா்,

நவரசம் சிபிஎஸ்இ பள்ளியின் தலைவா் ஆா்.பி.கதிா்வேல், செயலாளா் காா்த்திக், தாளாளா் அருண் காா்த்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிராக கிறிஸ்தவ அமைப்பு மனு: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

SCROLL FOR NEXT