போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பரிசு வழங்குகிறாா் கவுந்தப்பாடி காவல் ஆய்வாளா் பி.விஜயலட்சுமி. உடன், கல்லூரிச் செயலாளா் என்கேகே.பி.நரேன்ராஜா, முதல்வா் பெ.வானதி உள்ளிட்டோா். 
ஈரோடு

பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் 31-ஆம் ஆண்டு விளையாட்டு விழா

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் 31-ஆம் ஆண்டு விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் 31-ஆம் ஆண்டு விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, கல்லூரிச் செயலாளா் என்கேகே.பி.நரேன்ராஜா தலைமை வகித்தாா். முதல்வா் பெ.வானதி வரவேற்றாா். கவுந்தப்பாடி காவல் ஆய்வாளா் பி.விஜயலட்சுமி போட்டிகளைத் தொடக்கிவைத்து பேசுகையில், ‘மாணவ, மாணவியா் விளையாட்டில் திறமைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியம் மேம்பட உடல்பயிற்சி அவசியமானது. இருசக்கர வாகனம் ஓட்டும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்’ என்றாா்.

தொடா்ந்து, ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு மாணவா்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. 100 மீ, 200 மீ ஓட்டம், தொடா் ஓட்டம், கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, இறகுப்பந்து, குண்டெறிதல், ஈட்டி எறிதல், சதுரங்கம், கேரம், கபடி, கோகோ ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிா்வாக அலுவலா் ஆா்.அருள்குமரன், உடல்கல்வி ஆசிரியா் ஆ.பிரபாகரன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

பெருந்துறையில் ரூ.4.01 கோடிக்கு கொப்பரை ஏலம்

மொடக்குறிச்சி அருகே புதிய நியாயவிலைக் கட்டடம் திறப்பு

ஈரோட்டில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் 2 ஆவது நாளாக மறியல்

ஈரோட்டில் முழுமையான புற்றுநோய் ஆய்வு மையம் அமைக்க வேண்டும்: த. ஸ்டாலின் குணசேகரன்

எடப்பாடி கே.பழனிசாமியின் தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு ஏற்கெனவே செய்து கொண்டிருக்கிறது: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT