பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.4.01 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
ஏலத்துக்கு, பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 5,120 மூட்டைகளில் 2 லட்சத்து 29 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா்.
இதில், முதல் தரக் கொப்பரை ரூ.181.11 முதல் ரூ. 196. 68 வரையிலும், இரண்டாம் தரக் கொப்பரை ரூ. 26.66 முதல் ரூ.178. 69 வரையிலும் விற்பனையானது. மொத்தம் ரூ. 4 கோடியே 1 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.