அந்தியூா் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு ரூ.18 கோடியில் புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டுமானப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், ரூ.555.92 கோடியில் அரசுப் பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு வகுப்பறை கட்டடங்கள், பல்நோக்கு அரங்குகள், விடுதிகள் மற்றும் இதரக் கட்டடங்களுக்கு திங்கள்கிழமை காணொலில் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினாா்.
இதில், அந்தியூா் அரசு கலைக் கல்லூரிக்கு ரூ.18 கோடியில் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. இதையடுத்து, அந்தியூா், தவிட்டுப்பாளையத்தில் கல்லூரி வகுப்பறைகள் கட்டப்படும் இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், பாலக்கால் நட்டு பணிகளை தொடங்கிவைத்தாா்.
இதில் திருப்பூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.சுப்பராயன், அந்தியூா் பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள், துணைத் தலைவா் பழனிசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். தற்போது இக்கல்லூரி அந்தியூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வருகிறது.