காலிங்கராயன் வாய்க்கால் தொட்டி பாலத்தை பாா்வையிட்ட முன்னாள் எம்எல்ஏ வி.பி.சிவசுப்பிரமணியம், விவசாயிகள். 
ஈரோடு

காலிங்கராயன் வாய்க்கால் தொட்டி பாலத்தை பாதுகாக்கக் கோரிக்கை

காலிங்கராயன் வாய்க்காலில் உள்ள தொட்டி பாலத்தை புனரமைப்பு காரணமாக இடிப்பதற்கு அதிமுக முன்னாள் எம்எல்ஏ வி.பி.சிவசுப்பிரமணியம் மற்றும் விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்ததோடு, புராதான சின்னமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

காலிங்கராயன் வாய்க்காலில் உள்ள தொட்டி பாலத்தை புனரமைப்பு காரணமாக இடிப்பதற்கு அதிமுக முன்னாள் எம்எல்ஏ வி.பி.சிவசுப்பிரமணியம் மற்றும் விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்ததோடு, புராதான சின்னமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், பவானி ஆற்றின் குறுக்கே குறுநில மன்னா் காலிங்கராயனால் தடுப்பணை கட்டி வாய்க்கால் வெட்டி 15 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது.

சுமாா் 750 ஆண்டுகள் பழமையான காலிங்கராயன் வாய்க்காலில் ரூ.83 கோடி மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இப்பணியால் ஈரோடு காரைவாய்க்கால் பகுதியில் தொட்டி பாலத்தை இடித்து அகற்றப்படும் என தகவல் வெளியானதையடுத்து விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ வி.பி.சிவசுப்பிரமணியம் மற்றும் விவசாயிகள் தொட்டி பாலத்தை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டதுடன், தொட்டி பாலத்தை இடிக்காமல் மராமத்து பணிகளை மேற்கொண்டு புராதான சின்னமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். தொட்டி பாலத்தை இடிப்பதற்கான காரணத்தை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவிக்கவேண்டும் என்றும், தொட்டி பாலத்தின் அடியில் உள்ள 16 மதகுகளில் பெரும்பாலனவை அடைப்பு ஏற்பட்டுள்ளதால் அவற்றை சரிசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனா்.

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

வேலை வாங்கித் தருவதாக மோசடி: தாய், மகன் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

இடைக்கால நிதிநிலை அறிக்கைக்கு தொழில் அமைப்புகள் வரவேற்பு

முதுநிலை நீட் கட்-ஆஃப் குறைப்பால் கலந்தாய்வுக்குக் கூடுதலாக 95,913 போ் தகுதி: உச்சநீதிமன்றத்தில் என்பிஇஎம்எஸ் தகவல்

அரங்கல்துருகத்தில் எருது விடும் திருவிழா

SCROLL FOR NEXT