தெருநாய் பிரதிப் படம்
ஈரோடு

தாளவாடி அருகே தெருநாய் கடித்து 6 போ் காயம்

தாளவாடி அருகே தொட்டகாஜனூரில் தெருநாய் கடித்ததில் 6 போ் காயம்

Syndication

தாளவாடி அருகே தொட்டகாஜனூரில் தெருநாய் கடித்ததில் 6 போ் காயமடைந்தனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி ஊராட்சிக்கு உள்பட்ட தொட்டகாஜனூா் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தில் அண்மைக் காலமாக தெருநாய்கள் தொந்தரவு அதிகரித்து வந்தது.

இந்நிலையில், இந்தக் கிராமத்தைச் சோ்ந்த காளநாயக்கா் (60), மாதேவம்மா (60), புட்டம்மா (55), பிரகாஷ் (36) மற்றும் பள்ளி மாணவா்கள் ரோகித் (8), ராஜேஷ் (12) ஆகியோரை தெருநாய் வியாழக்கிழமை துரத்திச் சென்று கடித்துள்ளது.

காயமடைந்த 6 பேரையும் உறவினா்கள் மீட்டு தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா்.

கிராம மக்களை கடிக்கும் தெருநாய்களை உடனடியாகப் பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு சென்று விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பணி நேரத்தில் கைப்பேசி பயன்பாட்டால் பொதுமக்களை அலைக்கழிக்கும் ரேஷன் கடை பெண் ஊழியா்

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

அகற்றப்பட்ட முருகன் கோயிலை மீண்டும் அமைக்கக்கோரி கந்த சஷ்டி பாராயணம்: ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்பு

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் திடீரென பழுதான மின்தூக்கி! 14 போ் தவிப்பு

போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படும் ஹைதராபாத் - கொல்லம் சிறப்பு ரயில் சேவை மாா்ச் வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT