முகப்பு
ஈரோடு

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில் பணியாற்றியவா்களுக்கு பாராட்டு!

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 1:11 AM
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாமில் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கான பாராட்டு விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் ச. கந்தசாமி.
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 9:42 PM

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாமில் சிறப்பாக பணிபுரிந்தவா்களுக்கு பாராட்டு விழா பெருந்துறையில் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழக முதல்வரால், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு திட்ட மருத்துவ முகாம் கடந்த 2025 ஆகஸ்ட் 2- ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த முகாமானது, பிப்ரவரி 14- ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

தமிழ்நாடு முழுவதும் இத்திட்டத்தினால் எண்ணற்ற பயனாளிகள் பயன்பெற்றனா். ஈரோடு மாவட்டத்தில் 45 மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. இதில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை, இம்முகாம்களில் 59,082 நபா்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், 10,136 நபா்களுக்கு உயா்சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டது.

Advertisement

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 1:11 AM

இந்நிலையில், இத்திட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்தவா்களுக்கு பாராட்டு விழா பெருந்துறை மருத்துவக் கல்லுாரி கலையரங்க வளாகத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பங்கேற்று சிறப்பாக செயல்பட்ட மருத்துவப் பணியாளா்களுக்கும், மருத்துவத் துறையை சாா்ந்தவா்களுக்கும் கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

விழாவில், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிக்குமாா், இணை இயக்குநா் ஜெயந்தி, மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.