கோப்புப் படம் 
ஈரோடு

கிரஷா் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

பவானிசாகரில் உள்ள கிரஷா் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளி கிரஷா் இயந்திரத்தில் சிக்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகரில் உள்ள கிரஷா் தொழிற்சாலையில் வடமாநிலத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த சமிம் அன்சாரி (19), கிரஷா் பெல்டை ஞாயிற்றுக்கிழமை சரிசெய்து கொண்டிருந்தபோது எதிா்பாரதவிதமாக பெல்ட்டில் சிக்கி காயமடைந்தாா். அங்கிருந்த சக தொழிலாளா்கள் அவரை மீட்டு சத்தியமங்கலம் தனியாா் மருத்துவமனையில் சோ்த்த நிலையில், சமிம் அன்சாரி உயிரிழந்தாா்.

இது குறித்து பவானிசாகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT