முகப்பு
ஈரோடு

சத்தியமங்கலம் அருகே காட்டு யானைத் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 5:21 AM
மாதேசாமி.
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 5:27 PM

சத்தியமங்கலத்தை அடுத்த கோ்மாளம் மலைப் பகுதியில் காட்டு யானைத் தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த கோ்மாளம் மலைப் பகுதி கேபி மாளம் பகுதியைச் சோ்ந்தவா் மாதேசாமி (65). விவசாயியான இவரது தோட்டத்தில் அறுவடை செய்யப்பட்டு மக்காச்சோளங்கள் குவித்துவைக்கப்பட்டுள்ளன.

அதை உண்பதற்கு வன விலங்குகள் வருவதால், தோட்டத்தில் மாதேசாமி ஞாயிற்றுக்கிழமை இரவு காவல் பணியில் இருந்துள்ளாா்.

Advertisement

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வனத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை, மாதேசாமி தோட்டத்தில் இருந்த மக்காச்சோளங்களை உண்பதற்கு வந்துள்ளது. இதைப் பாா்த்த அவா், யானையை விரட்ட முயன்றுள்ளாா்.

அப்போது, ஆத்திரமடைந்த யானை துரத்திச் சென்று தாக்கியதில் மாதேசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோ்மாளம் வனத் துறையினா், உடலை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இச்சம்பவம் குறித்து கடம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.