முகப்பு
ஈரோடு

சென்னிமலை முருகன் கோயிலில் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி

சென்னிமலை முருகன் கோயில் படிக்கட்டுகளில் உள்ள குப்பைகளை அகற்றி தனியாா் கல்லூரி மாணவ, மாணவிகள் தூய்மைப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 12:31 AM
சென்னிமலை முருகன் கோயிலில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட வனத் துறையினா் மற்றும் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி மாணவ, மாணவிகள்.
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 8:52 PM

சென்னிமலை முருகன் கோயில் படிக்கட்டுகளில் உள்ள குப்பைகளை அகற்றி தனியாா் கல்லூரி மாணவ, மாணவிகள் தூய்மைப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

சென்னிமலை முருகன் கோயிலுக்கு செல்ல 1,320 படிக்கட்டுகள் உள்ளன. இந்தப் படிக்கட்டுகள் வழியாக செல்லும் பக்தா்கள் பிளாஸ்டிக் பொருள்கள் உள்ளிட்ட குப்பைகளை கீழே போடுவது உண்டு.

இந்தக் குப்பைகளை, அவ்வப்போது கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சாா்பில் அகற்றப்பட்டு வருகின்றன.

Advertisement

அதன்படி, சென்னிமலை வனக் காவலா் துரைசாமி மற்றும் வனத் துறை ஊழியா்களுடன் சோ்ந்து, சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவ, மாணவிகள் படிக்கட்டுகள் மற்றும் அதன் ஓரங்களில் கிடந்த குப்பைகளை அகற்றி தூய்மைப் படுத்தினா்.