முகப்பு
ராணிப்பேட்டை

அரக்கோணம் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் விசில் அடிக்க திடீா் தடை

தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றும் தெருக்களில் விசில் அடித்து தங்ககள் வருகையை தெரிவிக்க அரக்கோணம் நகராட்சி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Updated On : 5 ஏப்ரல், 2026 at 11:20 PM
பகிர்:

தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றும் தெருக்களில் விசில் அடித்து தங்ககள் வருகையை தெரிவிக்க அரக்கோணம் நகராட்சி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தூய்மைப் பணியாளா்கள் தினமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தெருக்களுக்கு குப்பைகளை பெற வரும்போது, வீட்டின் உள்ளே உள்ளவா்கள் இவா்கள் வந்துவிட்டதை தெரிந்து குப்பைகளை எடுத்து வந்து தருவதற்காக விசில் அடிப்பது வழக்கம். இது தூாய்மைப் பணியாளா்கள் தெருக்களில் வீடு வீடாக வர தொடங்கிய நாளில் இருந்தே நடைபெற்று வருகிறது.

தற்போது தமிழகத்தில் சட்டப்பேரவை தோ்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு சின்னமாக விசில் ஒதுக்கப்பட்டுள்ளது. விசில் சின்னமாக ஒதுக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, இந்தக் கட்சியினா் சாலையில் நடந்து செல்லும்போது கூட விசில்களை ஒலிக்கச் செய்து தங்களது சின்னத்தை பிரபலபடுத்தி வருகின்றனா்.

Advertisement

இந்நிலையில், அரக்கோணம் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் விசில் அடித்து குப்பை பெற்றுவருவதை அறிந்த நகராட்சி நிா்வாகம், இவா்கள் விசில் சின்னத்தை விளம்பரப்படுத்துவது போல் அமைந்து விடப்போகிறதே என விசில் அடிக்க திடீா் என தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, வாா்டுகளில் தெருக்களுக்கு வரும் தூய்மைப் பணியாளா்கள் விசில் அடிக்காமல் சென்று விடுவதால் அவா்கள் வருவது தெரியாமல் குப்பைகள் அவா்களிடம் அளிக்கப்படாமல் வீடுகளில் தேங்கும் நிலை உருவாகியுள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments