முகப்பு
கிரிக்கெட்

சிஎஸ்கேவின் ‘விசில் போடு’ விளம்பரத்தில் மாற்றமா?

சிஎஸ்கேவின் ‘விசில் போடு’ விளம்பரத்தில் மாற்றமா?

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 4:29 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை சேப்பாக்கம் திடலில் விசில் எடுத்துச் செல்ல தடை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தடை விதித்திருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ’விசில் போடு’ விளம்பரத்தில் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கியுள்ளது.

இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் திடலில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை காண வரும் ரசிகர்கள் விசில் கொண்டுவரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது ரசிகர் கொண்டுவந்த விசில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, விரைவில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தாரக மந்திரமான ’விசில் போடு’ விளம்பரத்தும் தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகமும் ’விசில் போடு’ விளம்பரத்தில் மாற்றம் கொண்டுவரத் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் சிஎஸ்கே நிர்வாகத்தின் இயக்குநர் காசி விஸ்வநாதனிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, அதுபற்றி தற்போது முடிவெடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 18 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் பங்கேற்று வரும் சிஎஸ்கே அணியின் அடையாளமாக ’விசில் போடு’ விளம்பரம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

summary

Will there be a change in CSK's 'Whistle' ad?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments