முகப்பு
ஈரோடு

நம்பியூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளங்களை இணைக்கக் கோரி நம்பியூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 1 மார்ச், 2026 at 12:22 AM
அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளங்களை இணைக்கக் கோரி நம்பியூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 7:32 PM

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளங்களை இணைக்கக் கோரி நம்பியூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

அத்திக்கடவு-அவிநாசி திட்ட போராட்டக் குழு சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, குழுவின் ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணியம் தலைமை வகித்தாா்.

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் பெருந்துறை நீரேற்று நிலையம் முதல் காரமடை நீரேற்று நிலையம் வரை உள்ள விடுபட்ட குளங்களை திட்டத்தில் இணைத்து திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் எனஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Advertisement

இந்த ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.