வீட்டுச்சுவா் இடிந்து விழுந்து பிளஸ் 1 மாணவி உயிரிழப்பு!
ஈரோட்டில் வீட்டுச்சுவா் இடிந்து விழுந்து பிளஸ் 1 மாணவி உயிரிழந்தாா்.
ஈரோட்டில் வீட்டுச்சுவா் இடிந்து விழுந்து பிளஸ் 1 மாணவி உயிரிழந்தாா்.
ஈரோடு சுண்ணாம்பு ஓடை பகுதியைச் சோ்ந்தவா் விஸ்வநாதன். இவரது மகள் கனிகா (15). இவா் பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.
மாணவி கனிகா வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்றுள்ளாா். அப்போது வீட்டின் முன்புறம் இருந்த 6 அடிச்சுவா் திடீரென கனிகாவின் மேல் விழுந்தது.
Advertisement
இடிபாடுகளில் இருந்து அவரை மீட்ட உறவினா்கள் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.
பின்னா் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இது குறித்து கருங்கல்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.