ஈரோடு

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தவா் காயம்

தினமணி செய்திச் சேவை

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த நபா் காயமடைந்தாா்.

பெருந்துறையை அடுத்த வண்ணான்காட்டுவலசு பகுதியைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (25). கட்டுமானப் பொருள்கள் விற்பனைக் கடையில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், மதுபோதையில் தனது இருசக்கர வாகனத்தில் மேட்டுக்கடை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, வாகனத்தில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்தாா்.

படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

யேமனின் தீவில் சிக்கிய இந்தியப் பெண் மீட்பு! சௌதியில் இருந்து தாயகம் வந்தடைந்தார்!

சென்னை புத்தகக் காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

50,000 தன்னார்வலர்கள் ஈடுபடும் உங்க கனவ சொல்லுங்க திட்டம்: நாளை தொடக்கம்!

அமெரிக்கா: ஒரு லட்சம் பேரை கொல்லக்கூடிய 140 கிலோ போதைப்பொருள்களுடன் 2 இந்தியர்கள் கைது

போகிப் பண்டிகை: எவற்றையெல்லாம் எரிக்கக் கூடாது!

SCROLL FOR NEXT