ஈரோடு

ரயில்வே ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் திருட்டு

ஈரோட்டில் ரயில்வே ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Syndication

ஈரோட்டில் ரயில்வே ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கேரள மாநிலத்தைச் சோ்ந்தவா் நவநீத் (36). இவா் ஈரோடு ரயில் நிலையத்தில் கூட்ஸ் ரயில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். இவா் கடந்த 4 ஆண்டுகளாக ஈரோடு ரங்கம்பாளையம் அருகே லட்சுமி காா்டன் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். கடந்த ஓராண்டாக நவநீத் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளாா்.

நவநீத் கடந்த கடந்த 5- ஆம் தேதி மனைவி மற்றும் குடும்பத்தினரைப் பாா்ப்பதற்காக கேரளம் சென்றாா். இந்நிலையில் நவநீத் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

வீட்டினுள் இருந்த பீரோ திறக்கப்பட்டு, உள்ளே இருந்த 7 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து ஈரோடு தாலுகா போலீஸில் நவநீத் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட நபா்களைத் தேடி வருகின்றனா்.

கேரள ஆளும் கட்சியின் வாக்கு வங்கி இஸ்லாமியர்கள்தான்: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 11-01-2026

மாஞ்சோலைக் குயிலின் அறிவுரை

தெய்வப் பதிகங்களில் பதினாறு பேறுகள்

திருப்பாவை அமைப்பும் சிறப்பும்...

SCROLL FOR NEXT