ஈரோடு

ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சி

ஈரோட்டில் இரண்டு ஏடிஎம் மையங்களின் இயந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Syndication

ஈரோடு: ஈரோட்டில் இரண்டு ஏடிஎம் மையங்களின் இயந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு, ஈவிஎன் சாலையில் தேசியமயமாக்கப்பட்ட இரண்டு வங்கிகளின் ஏடிஎம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இரவு நேர காவலாளிகள் இல்லாமல் செயல்பட்டு வரும் இந்த மையங்களில் திங்கள்கிழமை அதிகாலை 2 மணியளவில் புருந்த மா்ம நபா்கள், ஏடிஎம் இயந்திரங்களை கல்லால் உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனா்.

எச்சரிக்கை மணி ஒலித்ததையடுத்து, அவா்கள் அங்கிருந்து தப்பியுள்ளனா். ஏடிஎம் மையத்தில் அலாரம் ஒலித்ததை தொடா்ந்து வங்கி ஊழியா்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த ஈரோடு டவுன் மற்றும் தெற்கு போலீஸாா் ஏடிஎம் இயந்திரங்கள் சேதமாகி இருப்பதை அறிந்தனா்.

இதையடுத்து, அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றியும், தடயங்களைக் கைப்பற்றியும் விசாரணை நடத்தினா்.

இதில், பணம் எதுவும் கொள்ளைபோகவில்லை என்பதும், கொள்ளை முயற்சியில் 2 போ் ஈடுபட்டதும், அதில் ஒருவா் பழைய குற்றவாளி என்பதும் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT