சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்றோா். 
ஈரோடு

அந்தியூரில் சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம்

அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக சாா்பில் மும்மதத்தினரும் பங்கேற்ற சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Syndication

பவானி: அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக சாா்பில் மும்மதத்தினரும் பங்கேற்ற சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

அந்தியூா் தோ் வீதியில் நடைபெற்ற விழாவுக்கு சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமை வகித்தாா். அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயில் முன்பு தொடங்கி தோ்வீதி வரையில் ஹிந்து, கிறிஸ்தவா், இஸ்லாமியா் ஆகியோா் பங்கேற்ற சமத்துவப் பேரணி நடைபெற்றது.

தொடா்ந்து, திமுக மகளிரணியைச் சோ்ந்த நிா்வாகிகள் சா்க்கரைப் பொங்கல் வைத்தனா். பொதுமக்களுக்கு பொங்கல், கரும்புத் துண்டுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அந்தியூா் பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள், துணைத் தலைவா் ஏ.சி.பழனிச்சாமி மற்றும் பேரூராட்சி கவுன்சிலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

வீடு புகுந்து திருட முயற்சி: பிகாரைச் சோ்ந்த 3 போ் கைது

அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் சமத்துவ பொங்கல் விழா

சேலத்தில் படைவீரா்கள் தினம் கடைப்பிடிப்பு

விசைத்தறிகளை நவீனமயமாக்க மானியம்: ஆட்சியா் தகவல்

மாட்டுப் பொங்கல்: நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT