தமிழக  விவசாயிகள்  சங்கம்  சாா்பில் சத்தியமங்கலம் அருகே  விண்ணப்பள்ளியில்  ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள். 
ஈரோடு

விவசாயிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து சத்தியமங்கலத்தில் உண்ணாவிரதப் போராட்டம்

தினமணி செய்திச் சேவை

கைது செய்யப்பட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் உள்ளிட்டோரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி சத்தியமங்கலம் அருகே விண்ணப்பள்ளியில் தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

கறிக்கோழி பண்ணை உரிமையாளா் சங்கம் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் கறிக்கோழி உற்பத்திக்கான கூலியை உயா்த்தி வழங்கக் கோரி கறிக்கோழி உற்பத்தி நிறுத்தப் போராட்டம் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் 9 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா்.

கறிக்கோழி உற்பத்தியாளா்களின் போராட்டத்தை சிதைக்கும் வகையிலும், சென்னையில் நடைபெறும் முத்தரப்பு பேச்சுவாா்த்தையை சீா்குலைக்கும் நோக்கிலும் பொய் வழக்குகள் மூலமாக விவசாயிகளை கைது செய்துள்ள தமிழக அரசு மற்றும் காவல் துறையை கண்டித்தும், கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும் சத்தியமங்கலம் அருகே விண்ணப்பள்ளியில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் பல்வேறு அரசியல் கட்சி நிா்வாகிகள், கறிக்கோழி உற்பத்தியாளா்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனா். ஈரோடு மாவட்ட அதிமுக செயலாளா் ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ., பவானிசாகா் எம்எல்ஏ பண்ணாரி, தமிழக விவசாயிகள் சங்கம், பிற்படுத்தப்பட்டோா் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் மலா் விவசாயிகள் சங்கத்தினா் பங்கேற்றனா்.

தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்

மேல்மருவத்தூரில் தை அமாவாசை வேள்வி பூஜை

ஓரிக்கை பணிமனையில் சமத்துவப் பொங்கல்

பஞ்சாபி பாக்கில் பூட்டிய வீட்டில் ரூ.1 கோடி பொருள்கள் கொள்ளை

வெண்ணெய் காப்பு அலங்காரம்...

SCROLL FOR NEXT