ஈரோடு

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

தினமணி செய்திச் சேவை

பெருந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து தாலிக்கொடி திருடுபோயிருப்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் கிழக்கு வீதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் ஜெயகுமாா் (54). இவா், பெருந்துறை, கருக்கன்காட்டூரில் குடும்பத்துடன் தங்கி அருகில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.

கடந்த 15-ஆம் தேதி குடும்பத்துடன் திருச்செந்தூா் முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு சனிக்கிழமை இரவு பெருந்துறைக்கு வந்துள்ளாா். அப்போது வீட்டின் முன்பக்கக் கதவு திறந்துகிடந்துள்ளது.

உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த மூன்று பவுன் தங்க தாலிக் கொடி திருடுபோயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்

மேல்மருவத்தூரில் தை அமாவாசை வேள்வி பூஜை

ஓரிக்கை பணிமனையில் சமத்துவப் பொங்கல்

பஞ்சாபி பாக்கில் பூட்டிய வீட்டில் ரூ.1 கோடி பொருள்கள் கொள்ளை

வெண்ணெய் காப்பு அலங்காரம்...

SCROLL FOR NEXT