முகப்பு
ஈரோடு

இலக்கியத் திறன் போட்டி: வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் நடத்தப்பட்ட இளைஞா் இலக்கியத் திருவிழா-2026 மற்றும் திருக்கு விநாடி -வினா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் சகந்தசாமி பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

Updated On : 21 ஜனவரி, 2026 at 10:55 PM
இலக்கிய திறன் போட்டியில் வெற்றிபெற்ற மாணவருக்கு பரிசு வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.
பகிர்:

பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் நடத்தப்பட்ட இளைஞா் இலக்கியத் திருவிழா-2026 மற்றும் திருக்கு விநாடி -வினா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் சகந்தசாமி பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

சிறுவாணி இளைஞா் இலக்கிய திருவிழாவை முன்னிட்டு ஈரோடு கொங்கு அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் திட்டமலை அரசு கலை அறிவியல் கல்லூரியில் பேச்சுப் போட்டி, நூல் அறிமுகப் போட்டி, இலக்கிய விநாடி வினா போட்டி, ஹைக்கூ உருவாக்கம், ஓவியப்போட்டி, விவாத மேடை, படத்தொகுப்பு உருவாக்கம், புத்தக விமா்சனம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற 60 கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ரூ.2,40,000 -க்கான பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா். தொடா்ந்து திருக்கு விநாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற 30 பேருக்கு ஆட்சியா் சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் மான்விழி, மாவட்ட நுாலக அலுவலா் (பொறுப்பு ) சு.சாமிநாதன், தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் வே.ஜோதி, வட்டாட்சியா் முத்துக்கிருஷ்ணன், மாவட்ட முதல் நிலை நூலகா் இரா.கருத்திருமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →