திருடச் சென்ற வீட்டில் மூதாட்டி பாலியல் வன்கொடுமை: இளைஞா்கள் கைது
திருடச் சென்ற வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், பவானியைச் சோ்ந்தவா் 74 வயது மூதாட்டி. இவரது வீட்டுக்குள் மதுபோதையில் வெள்ளிக்கிழமை அதிகாலை புகுந்த இளைஞா்கள் இருவா் பித்தளைப் பொருள்களைத் திருடிக் கொண்டு தப்பியோட முயன்றனா்.
இதைக் கண்டு கூச்சலிட்ட அவரைக் கொலை செய்ய முயன்ற நிலையில், பாலியல் ரீதியாகவும் கொடுமை செய்துள்ளனா். இதில் படுகாயமடைந்த அவா் பவானி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின்பேரில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, பவானி மண் தொழிலாளா் இரண்டாவது வீதியைச் சோ்ந்த வேலன் மகன் ஹரிகுமாா் (22), செல்வம் மகன் கிரி (எ) கண்ணன் (23) ஆகியோா் இந்தச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து இருவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.