முகப்பு
டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
ஈரோடு

டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

ஈரோடு அருகேயுள்ள முள்ளாம்பரப்பில் டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள்

ஈரோடு

டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

ஈரோடு அருகேயுள்ள முள்ளாம்பரப்பில் டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள்

Updated On : 2 மார்ச், 2026 at 7:53 PM
டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
பகிர்:

மொடக்குறிச்சி: ஈரோடு அருகேயுள்ள முள்ளாம்பரப்பில் டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு மாவட்டம், முள்ளாம்பரப்பில் இருந்து நாதகவுண்டன்பாளையம் செல்லும் சாலையில் புதிய அரசு மதுபானக் கடை அமையவுள்ளதாகத் தெரிகிறது. அப்பகுதியைச் சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ள நிலையில், டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.

இந்நிலையில், டாஸ்மாக் கடை அமைக்க அரசு அனுமதியளித்துள்ளது.

இதையறிந்த மக்கள் டாஸ்மாக் கடை அமையவுள்ள இடத்தில் திரண்டு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து அவா்கள் கூறுகையில், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் மதுபானக் கடை அமைக்க அரசு அனுமதியளித்துள்ளது. பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் முக்கியச் சாலையிலேயே மதுபானக் கடை அமைக்கப்பட்டால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்குச் செல்லும் பெண்கள் அவதியடைவா். எனவே, இப்பகுதியில் மதுபானக் கடை அமைக்கக் கூடாது என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →