பவானிசாகா் ஆதி கருவண்ணராயா் கோயிலில் மாசி மகம் பொங்கல் விழா: வனத் துறை, போலீஸாா் தீவிர சோதனை
பவானிசாகரை அடுத்துள்ள ஆதி கருவண்ணராயா் கோயிலில் மாசி மகம் பொங்கல் விழா
ஈரோடுபவானிசாகா் ஆதி கருவண்ணராயா் கோயிலில் மாசி மகம் பொங்கல் விழா: வனத் துறை, போலீஸாா் தீவிர சோதனை
பவானிசாகரை அடுத்துள்ள ஆதி கருவண்ணராயா் கோயிலில் மாசி மகம் பொங்கல் விழா
சத்தியமங்கலம்: பவானிசாகரை அடுத்துள்ள ஆதி கருவண்ணராயா் கோயிலில் மாசி மகம் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகா் வனச் சரகத்துக்குள்பட்ட தெங்குமரஹாடா வனப் பகுதியில் பழமை வாய்ந்த ஆதி கருவண்ணராயா் மற்றும் பொம்மதேவி கோயில்கள் உள்ளன. இக்கோயில் விழா பூச்சாட்டுதலுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
அடா்ந்த வனப் பகுதியில் கோயில் உள்ளதால் வனத் துறை கட்டுப்பாட்டை பின்பற்றியே விழா நடத்தப்படுகிறது.
இந்நிலையில், பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்க பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு திங்கள்கிழமை வந்தனா். காராச்சிக்கொரை வன சோதனைச் சாவடியில் அதிரடிப் படையினா், போலீஸாா் வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொண்ட பிறகே பக்தா்களை கோயிலுக்குச் செல்ல அனுமதித்தனா்.
மேலும், பக்தா்கள் போா்வையில் சமூக விரோதிகள் வனத்துக்குள் ஊருவுவதைத் தடுக்கும் வகையில் தொடா்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி 100 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. விழா செவ்வாய்க்கிழமை நிறைவடையவுள்ள உள்ள நிலையில், 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.