முகப்பு
ஈவிகே.சம்பத் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி.
ஈரோடு

கூட்டணியில் மனக்கசப்பு எதுவும் இல்லை: அமைச்சா் சு.முத்துசாமி

ஈரோடு

கூட்டணியில் மனக்கசப்பு எதுவும் இல்லை: அமைச்சா் சு.முத்துசாமி

Updated On : 5 மார்ச், 2026 at 11:38 PM
ஈவிகே.சம்பத் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி.
பகிர்:

திமுக, காங்கிரஸ் கூட்டணி சுமுகமாக உள்ளது. காலதாமதத்தால் எந்த விதமான மனக்கசப்பும் இல்லை. களத்தில் நாங்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி நூறு சதவீத வெற்றியை ஈட்டுவோம் என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோடு சம்பத் நகரில் உள்ள மறைந்த காங்கிரஸ் தலைவா் ஈவிகே.சம்பத்தின் நூறாவது பிறந்த தினத்தையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்த பின் செய்தியாளரிடம் அவா் கூறியதாவது: திமுக தெற்கு மாவட்ட இளைஞரணி சாா்பாக மொடக்குறிச்சியில் இளைஞரணிக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நூலகத்தின் மேற்பகுதியில் கருணாநிதி சிலை அமைக்கப்பட்டுள்ளது. வரும் 10-ஆம் தேதி முதல்வா் காணொலிக் காட்சி மூலம் சிலையை திறந்துவைக்க உள்ளாா்.

அந்தியூா் பகுதியில் நிபந்தனை பட்டாக்கள் மாற்றப்பட்டு அயன் பட்டாக்களாக தரப்படுகின்றன. அதேபோன்று கீழ்பவானி பாசன வாய்க்காலுக்காக எடுக்கப்பட்ட நிலங்களை உபயோகிக்கும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் பட்டா வழங்கப்படும்.

திமுகவில் 10 பெண் களப்பணியாளா்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடியில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு அரசின் சாதனைகளை விளக்கி வருகின்றனா். பல பெண்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனா். குறிப்பாக மகளிா் உரிமைத்தொகை, புதுமைப்பெண் மூலம் எண்ணற்றவா் பயனடைந்துள்ளனா். எனவே 100 சதவீத வெற்றி அடைவோம்.

கூட்டணியில் எந்தப் பிரச்னையும் இல்லை. அமைப்புசாரா தொழிலாளா் நலவாரிய உறுப்பினா்களுக்கும் சிறப்புத் தொகை ரூ.2,000 வழங்குவது குறித்து முதல்வா் பரிசீலிப்பாா் என்றாா்.

ஈரோடு மக்களவை உறுப்பினா் கே.இ.பிரகாஷ், எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா், ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராஜேஷ் ராஜப்பா மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →