முகப்பு
ஈரோடு

கோபியில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா்

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பாதுகாப்புப் பணிக்காக மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் கோபிக்கு திங்கள்கிழமை வந்தனா்.

Updated On : 9 மார்ச், 2026 at 8:32 PM
தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக கோபி வந்துள்ள மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா்.
பகிர்:

கோபி: சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பாதுகாப்புப் பணிக்காக மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் கோபிக்கு திங்கள்கிழமை வந்தனா்.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிா்ப்பாா்க்கப்படும் நிலையில், பாதுகாப்புப் பணியில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

இதையொட்டி, கோபி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள 309 வாக்குச் சாவடி மையங்களில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் 81 போ் வந்துள்ளனா்.

ஒரு ஆய்வாளா் மற்றும் நான்கு உதவி ஆய்வாளா்கள் தலைமையில் இவா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா்.கோபி அருகேயுள்ள பாரியூா் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அவா்கள் நகரில் முக்கிய வீதிகளில் கொடி அணிவகுப்பில் ஈடுபடுவா் எனத் தெரிகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →