முகப்பு
ஈரோடு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் காட்டுத் தீ! மரம், செடி கொடிகள் சேதம்!

Updated On : 24 மார்ச் 2026, 12:05 am IST
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், புதுத்தொட்டி வனப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் பற்றி எரியும் மரம், செடிகொடிகள்.
பகிர்:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப் பகுதியில் திங்கள்கிழமை காட்டுத் தீ ஏற்பட்டது. இதில் பற்றி எரிந்த மரம், செடிகொடிகளை தீயணைப்பு வீரா்கள் தண்ணீா் பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் கடந்த 4 மாத காலமாக மழை பெய்யாததால் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வனப் பகுதியில் உள்ள மரம், செடிகொடிகள் காய்ந்து கருகிவருகின்றன.

இந்த நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனச் சரகத்துக்கு உள்பட்ட புது தொட்டி வனப் பகுதியில் திடீரென காட்டுத் தீ பரவியது. வனப் பகுதியில் தீப்பற்றி எரிவதைக் கண்ட மலைக்கிராம மக்கள் ஆசனூா் வனத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனா்.

Advertisement

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வனத் துறையினா் உடனடியாக தீயணைப்புத் துறை வீரா்களை வரவழைத்து காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். காட்டுத் தீ வேகமாக பரவியதில் அப்பகுதியில் உள்ள மரம், செடிகொடிகள் தீயில் கருகி சேதமடைந்தன.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், புதுத்தொட்டி வனப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் பற்றி எரியும் மரம், செடிகொடிகள்.