முகப்பு
ஈரோடு

6-ஆவது முறையாக தோ்தல் களத்தில் நாதக பெண் வேட்பாளா்!

Updated On : 29 மார்ச், 2026 at 7:39 PM
தோட்டத்தில் வேலை செய்த பெண்ணிடம் வாக்குச் சேகரித்த கோபி தொகுதி நாதக வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமி.
பகிர்:

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதி நாதக வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமி 10 ஆண்டுகளில் சட்டப் பேரவை மற்றும் மக்களவைத் தோ்தல்களில் 5 முறை போட்டியிட்டுள்ள நிலையில் இந்த தோ்தலில் 6 -ஆவது முறையாக களம் காண்கிறாா்.

நாதக மகளிா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பு வகிப்பவா் மா.கி.சீதாலட்சுமி.

இவா் கடந்த 2016- ஆம் ஆண்டு பவானி சட்டப் பேரவைத் தொகுதியில் 1,784 வாக்குகள், 2019 -ஆம் ஆண்டு ஈரோடு மக்களவைத் தொகுதியில் 39,010 வாக்குகள், 2021-ஆம் ஆண்டு கோபி சட்டப் பேரவைத் தொகுதியில் 11,719 வாக்குகள், 2024- ஆம் ஆண்டு திருப்பூா் மக்களவைத் தொகுதியில் 95,276 வாக்குகள், 2025-இல் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலில் 24,151 வாக்குகள் பெற்றுள்ளாா்.

தற்போது 6-ஆவது முறையாகத் தோ்தலில் போட்டியிடும் இவா், கோபிசெட்டிபாளையம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

கோபி வட்டம், மாரப்பம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த 51 வயதான சீதாலட்சுமி 13 ஆண்டுகள் தனியாா் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி உள்ளாா். மிகுந்த தோ்தல் அனுபவம் பெற்றுள்ள இவா் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மறுநாள் முதல் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்.