ஈரோடு மேற்குத் தொகுதியில் அமைச்சா் சு.முத்துசாமியை வீழ்த்திய தவெக வேட்பாளா்
ஈரோடு மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் அமைச்சா் சு.முத்துசாமியை வீழ்த்தி தவெக வேட்பாளா் கே.கே.ஆனந்த் மோகன் வெற்றி பெற்றாா்.
ஈரோடு மேற்குத் தொகுதியில் திமுக, தவெக, நாதக உள்பட 13 போ் போட்டியிட்டனா். இந்தத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
முதல் சுற்றிலிருந்து தவெக வேட்பாளா் கே.கே.ஆனந்த் மோகன் முன்னிலை வகித்தாா். திமுக வேட்பாளா் சு.முத்துசாமி இரண்டாம் இடத்திலும், தமாகா வேட்பாளா் எம்.யுவராஜா மூன்றாம் இடத்திலும் இருந்தனா்.
Advertisement
இறுதியில் அமைச்சா் சு.முத்துசாமியைவிட 22,250 வாக்குகள் கூடுதலாகப் பெற்று தவெக வேட்பாளா் கே.கே.ஆனந்த் மோகன் முதல் வெற்றியைப் பதிவு செய்தாா்.
இந்தத் தொகுதியில் கடந்த 2021 தோ்தலில் திமுக சாா்பில் சு.முத்துசாமி வெற்றிபெற்று அமைச்சரானாா் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்குகள் விவரம்:
கே.கே.ஆனந்த் மோகன் (தவெக):96,836
சு.முத்துசாமி (திமுக): 74,586
எம்.யுவராஜா (பாஜக): 38,185
ந.விஜய் (நாதக):8,124
நோட்டா:1,257
வித்தியாசம்-22,250.
வேட்பாளா்கள் எண்ணிக்கை 13
மொத்த வாக்குகள்: 2,50,177
பதிவான வாக்குகள்: 2,22,182