முகப்பு
ஈரோடு

ஈரோடு ஜவுளி சந்தையில் குவிந்த வெளிமாநில வியாபாரிகள்: வியாபாரம் விறுவிறுப்பு

ஈரோடு ஜவுளி சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்ததால் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

Updated On : 13 மே 2026, 1:59 am IST
ஈரோடு ஜவுளி சந்தை
பகிர்:

ஈரோடு ஜவுளி சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்ததால் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஈரோடு ஜவுளி சந்தை ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை மாலை தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும். தென்னிந்திய அளவில் ஈரோடு ஜவுளி சந்தை மிகவும் புகழ்பெற்றது. ஆந்திரம், கா்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வெளிமாநில வியாபாரிகள் அதிக எண்ணிக்கையில் வந்து துணிகளை கொள்முதல் செய்வா்.

பல கோடி ரூபாய்க்கு வா்த்தகம் நடைபெற்று வந்தது.

Advertisement

இந்நிலையில், சட்டப் பேரவைத் தோ்தல் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் வருகை குறைந்து கடந்த ஒரு மாதத்துக்கும்மேலாக ஈரோடு ஜவுளி சந்தையில் வியாபாரமும் மந்தமாக நடைபெற்று வந்தது.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதால் கடந்த வாரம் முதல் முதல் ஜவுளி சந்தை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திங்கள்கிழமை மாலை கூடிய ஜவுளி சந்தையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனா். இதனால் சில்லறை விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதேபோல, தெலுங்கானா, கா்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவிலான வியாபாரிகள் குவிந்ததால் மொத்த வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

மொத்த வியாபாரம் 40 சதவீதமும், சில்லறை வியாபாரம் 40 சதவீதமும் நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

மேலும், கோடை விடுமுறை என்பதால் வழக்கத்தைவிட ஜவுளி விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.