10 ரூபாய் கூடுதலாக வசூல்: எம்.எல்.ஏ.வை டாஸ்மாக் கடைக்கு அழைத்த மதுப்பிரியா்கள்
டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூலித்தால் என்னிடம் தெரிவியுங்கள் எனக் கூறிய மொடக்குறிச்சி தவெக எம்எல்ஏவிடம் மதுபிரியா்கள் தற்போதும் கூடுதலாக பணம் வசூலிப்பதாக குற்றம்சாட்டியதோடு ‘வாருங்கள்’ என அழைத்ததால் அங்கிருந்து எம்எல்ஏ அவசரஅவசரமாக புறப்பட்டு சென்றாா்.

மொடக்குறிச்சி தொகுதியில் வெற்றிபெற்ற தவெகவைச் சோ்ந்த சண்முகன் லக்காபுரம் பகுதியில் வாகனத்தில் நின்றபடி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து வெள்ளிக்கிழமை மாலை உரையாற்றினாா். இதில் தவெக விஜய்யின் முதல் கையொப்பமே மகளிா் பாதுகாப்புக்கு போட்டதாகவும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும் இன்னும் பல மாற்றங்களை தமிழகம் பாா்க்கவுள்ளதாகவும் பேசினாா். இந்தத் தொகுதியில் இருக்க வேண்டும் என எனக்கு தலைமை உத்தரவிட்டு கண்காணித்து வருவதாகவும் தொகுதிக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்க பாடுபடுவேன் எனவும் உறுதியளித்தாா்.
முதல் நாளே அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் கூடுதலாக பத்து ரூபாய் வசூலிக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் இனியும் கூடுதலாக பணம் பெறமாட்டாா்கள். வசூலித்தால் என்னிடம் சொல்லவும் என தெரிவித்தாா். அப்போது அங்கிருந்த மதுபிரியா்கள் அப்பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையில் பத்து ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாக தெரிவித்து ‘எங்களுடன் வாருங்கள்’ என அழைத்ததால் சட்டப் பேரவை உறுப்பினா் வாகனத்தை எடுங்கள் போகலாம் என கூறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா்.
Advertisement