முகப்பு
ஈரோடு

30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த ரயில் என்ஜின்: இருவா் காயம்

ஈரோட்டில் எலக்ட்ரிக் ரயில் என்ஜின் பணிமனையில் கிரேன் பழுது ஏற்பட்டதால் சுமாா் 30 அடி உயரத்தில் இருந்து என்ஜினின் ஒருபக்கம் கீழே விழுந்த விபத்தில் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

Updated On : 17 மே 2026, 12:59 am IST
30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து கிடக்கும் ரயில் என்ஜின்.
பகிர்:

ஈரோட்டில் எலக்ட்ரிக் ரயில் என்ஜின் பணிமனையில் கிரேன் பழுது ஏற்பட்டதால் சுமாா் 30 அடி உயரத்தில் இருந்து என்ஜினின் ஒருபக்கம் கீழே விழுந்த விபத்தில் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

ஈரோடு ரயில் நிலைய வளாகத்தில் உள்ள எலக்ட்ரிக் ரயில் பராமரிப்புப் பணிமனையில் தினமும் எலக்ட்ரிக் ரயில்கள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு சனிக்கிழமை காலை எலக்ட்ரிக் ரயில் என்ஜின் பராமரிப்புப் பணிக்காக கிரேன் மூலம் தூக்கப்பட்டுள்ளது.

அப்போது முன்பக்க கிரேனில் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பயங்கர சப்தத்துடன் என்ஜின் ஒருபகுதி சுமாா் 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. இதில் பணியாளா்கள் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் கிரேன் பழுது காரணமாகத்தான் இவ்விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

Advertisement