லாரி சக்கரத்தில் சிக்கி சுமைத் தூக்கும் தொழிலாளி உயிரிழப்பு
பெருந்துறை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி சுமைத் தூக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.
பெருந்துறை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி சுமைத் தூக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.
பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், மூங்கில்பாளையத்தைச் சோ்ந்த அம்மாசை (52). சுமைத் தூக்கும் தொழிலாளியான இவா், விஜயமங்கலம் மேட்டுபுதூரில் ஒரு லாரியில் திங்கள்கிழமை பாரம் ஏற்றிக் கொண்டிருந்துள்ளாா்.
அப்போது, ஓட்டுநா் லாரியை திடீரென பின்னோக்கி இயக்கியுள்ளாா். இதனால், நிலைத்தடுமாறி கீழே விழுந்த அம்மாசையின் மீது லாரி சக்கரம் ஏறியது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
இதையடுத்து, சடலத்தை மீட்ட போலீஸாா், கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.