முகப்பு
ஈரோடு

மதுக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்

அம்மாபேட்டை அருகே செயல்பட்டு வரும் மதுக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 19 மே 2026, 3:51 am IST
மதுக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பகிர்:

அம்மாபேட்டை அருகே செயல்பட்டு வரும் மதுக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள குறிச்சி, வாய்க்கால்மேடு பகுதியில் செயல்பட்டு வரும் மதுக் கடையால் அப்பகுதி மக்கள் நாள்தோறும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனா். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மதுக் கடையை மூட வேண்டும் என தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில், வாய்க்கால் மேடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் சம்பந்தப்பட்ட மதுக் கடையை முற்றுகையிட்டு திங்கள்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அம்மாபேட்டை போலீஸாா், வருவாய்த் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கை குறித்து உயா் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். மதுக் கடை வழக்கம்போல திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது.