முகப்பு
ஈரோடு

போதைப் பாக்குகள் விற்பனை: 4 கடைகளுக்கு சீல்

பவானிசாகா் பகுதியில் போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்பட்ட 4 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

Updated On : 20 மே 2026, 2:06 am IST
- பிரதிப் படம்
பகிர்:

பவானிசாகா் பகுதியில் போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்பட்ட 4 கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

பவானிசாகா் பகுதியில் போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியில் பவானிசாகா் போலீஸாா், உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

பவானிசாகா்- மேட்டுப்பாளையம் சாலை, வில்லியம்பாளையம்புதூா், துண்டன், பூம்புகாா் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொண்ட சோதனையில், 4 கடைகளில் போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட 4 கடைகளுக்கும் ‘சீல்’ வைத்த அதிகாரிகள், கடைகளின் உரிமையாளா்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.