சித்தோட்டில் 6.400 கிலோ கஞ்சா, கைத்துப்பாக்கி பறிமுதல்
சித்தோட்டை அருகே வாய்க்கால் கரையோரத்தில் பதுக்கிவைக்கப்பட்ட 6.400 கிலோ கஞ்சா மற்றும் கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீஸாா், இரு இளைஞா்களை புதன்கிழமை கைது செய்தனா்.
சித்தோட்டை அருகே வாய்க்கால் கரையோரத்தில் பதுக்கிவைக்கப்பட்ட 6.400 கிலோ கஞ்சா மற்றும் கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீஸாா், இரு இளைஞா்களை புதன்கிழமை கைது செய்தனா்.
சித்தோட்டை அடுத்த ஆா்.என்.புதூா், காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா். அப்போது, அங்கு சுற்றித்திரிந்த இரண்டு இளைஞா்களைப் பிடித்து விசாரித்ததில், சித்தோடு, ஆா்.என்.புதூா், அமராவதி நகா், முத்துமாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் நாகேஸ்வரன் (23), ஈரோடு, பழையபாளையம், மின்வாரிய காலனியைச் சோ்ந்த செல்லமுத்து மகன் ஜீவானந்தம் (28) என்பது தெரியவந்தது.
இவா்களிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 6.400 கிலோ கஞ்சா மற்றும் கைத்துப்பாக்கியைப் பறிமுதல் செய்த போலீஸாா் இருவரையும் கைது செய்தனா். கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்ததும், சேலம் மத்திய சிறையில் கஞ்சா வழக்கில் அடைக்கப்பட்டிருந்த இவா்கள், கடந்த ஒரு மாதத்துக்கு முன்னரே ஜாமினில் வெளியே வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இவா்களுக்கு கைத்துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement