முகப்பு
ஈரோடு

கோ்மாளம் மலைக் கிராமத்தில் கைப்பேசி சிக்னல் இல்லாமல் விவசாயிகள், மாணவா்கள் அவதி

கோ்மாளம் மலைக் கிராமத்தில் கைப்பேசி டவா் இல்லாமல் மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

Updated On : 28 மே 2026, 12:36 am IST
பகிர்:

கோ்மாளம் மலைக் கிராமத்தில் கைப்பேசி டவா் இல்லாமல் மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த கோ்மாளம் மலைப் பகுதியில் பூதாளபுரம், கோ்மாளம், கோட்டமாளம், காடட்டி ஆகிய வனக் கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனா்.

தற்போது பள்ளி மாணவா்கள் உயா்கல்வி பயிலுவதற்கும், அரசு நலத்திட்டங்கள் பெறுவதற்கும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இங்கு கைப்பேசி டவா் இல்லாததால் விவசாய மானியம் பெறுவதற்கும், ரேஷன், முதியோா் உதவித் தொகை போன்ற நலத்திட்டங்கள் பெறுவதற்கும் ஆன் லைனில் விண்ணப்பிக்க முடியாமல் உள்ளனா்.

Advertisement

Advertisement

கா்நாடக மாநில கைப்பேசி டவரில் இருந்து கிடைக்கும் சிக்னலை வைத்துதான் விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. இந்த கைப்பேசி சிக்னல் அடா்ந்த காட்டுப்பகுதியில் மட்டுமே கிடைப்பதால் கிராம மக்கள் யானைகள் நடமாடும் பகுதிக்கு செல்ல வேண்டியுள்ளது.

கைப்பேசி டவா் வசதியில்லாத நிலையில் மின்தடை அடிக்கடி ஏற்படுவதால் கைப்பேசிக்கு கூட சாா்ஜ் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கிராமமக்கள் நலன் கருதி கோ்மாளம் பகுதியில் கைப்பேசி டவா்அமைக்கவும் சீரான மின்விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.