மத்திய அரசின் 20 அம்ச திட்டத்தின்கீழ் ராணுவத்தினருக்கு 200 வீடுகள் கட்ட முடிவு
நீலகிரி மாவட்டத்தில் மத்திய அரசின் 20 அம்ச திட்டத்தின்கீழ் ராணுவத்தினருக்கு 200 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் மத்திய அரசின் 20 அம்ச திட்டத்தின்கீழ் ராணுவத்தினருக்கு 200 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கிரிஷ் விகாஸ் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரசாஞ்சித் போஸ், உதகையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். கடந்த 1975-இல் 20 அம்ச திட்டத்தை அவர் அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கடந்த 1983ஆம் ஆண்டில் கிரிஷ் விகாஸ் கேந்திரா அமைப்பு உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பு கடந்த 20 ஆண்டுகளாக வறுமையை ஒழிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
Advertisement
மேலும் அனைவருக்கும் வீடு என்ற நோக்கத்துடன் நூற்றாண்டு திட்டமான கிரிஷ் விகாஸ் ஆவாஸ் யோஜனா என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் அனைத்து தரப்பு மக்களுக்கும் வீடு கட்டித்தர முடிவு செய்யப்பட்டு, தற்போது நாடு முழுதும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் நீலகிரியில் முதற்கட்டமாக 200 வீடுகள் கட்டித்தர முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வீடுகள் ரூ.13.5 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சம் வரையிலான விலையில் கட்டித் தரப்படும். இதற்காக உதகை அருகேயுள்ள காத்தாடிமட்டம் பகுதியில் பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக ராணுவத்தில் பணி புரிபவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் பழங்குடியினருக்கும் முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் கட்டித்தரப்படவுள்ளது என்றார்.