நீலகிரி

பாம்புக் கடியால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க "ஆபரேசன் மிருத்யுஞ்சயா' தொடக்கம்

பாம்புக் கடியால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்க அனைத்து மாவட்டங்களிலும் "அபரேசன் மிருத்யுஞ்சயா' திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

ஏ. பேட்ரிக்

பாம்புக் கடியால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்க அனைத்து மாவட்டங்களிலும் "அபரேசன் மிருத்யுஞ்சயா' திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் பாம்புக் கடிக்கு சுமார் 50,000 பேர் பலியாகின்றனர். இவர்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அதிலும் 95 சதவீதத்தினர் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள்.

இந்நிலையில், பாம்புக் கடியால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்க முதல்வர் ஜெயலலிதா புதிய முயற்சியை எடுத்துள்ளார். அதன்படி

"ஆபரேசன் மிருத்யுஞ்சயா' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி, தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பாம்புக் கடி, அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோருக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தை கானுயிர், இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளை (ரசஇப) அமைப்பு மூலம் செயல்படுத்த தமிழக மருத்துவப் பணிகள் இயக்குநர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கானுயிர், இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சாதிக் அலி கூறியதாவது: பாம்புக் கடியால் உயிரிழப்போரில் பெரும்பாலானோர் குடிசைகளில் வசிப்போர், விவசாயத் தொழிலாளர்கள், செருப்பு அணியாமல் செல்வோர் உள்ளிட்டோர் ஆவர்.

இவ்வாறு பாம்புக் கடிக்கு உள்ளாகியோர் மருத்துவமனைக்குச் செல்வதில் ஏற்படும் கால தாமதம், உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காதது, கடித்த பாம்பு விஷமுடையதா அல்லது விஷத்தன்மையற்றதா என்பதைக் கண்டறிவதில் ஏற்படும் குழப்பம் ஆகியவை காரணமாக உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.

பாம்புக் கடிக்கான சிகிச்சை ஒவ்வொரு அரசு மருத்துவமனையில் கொடுக்கப்படுவதை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கான பயிற்சி முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இம்முகாம்களில் சுகாதாரத் துறையினருடன் கல்வித்துறை, வனத்துறையினரும் சேர்ந்து ஈடுபடவுள்ளனர்.

இத்திட்டம் முதற்கட்டமாக மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்டோருக்கு பாம்புக் கடி குறித்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதைத்தவிர தமிழகத்தில் எந்தப் பகுதியில் பாம்புக் கடி உள்ளிட்ட விஷக் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான முதலுதவி சிகிச்சைக்காக எங்கள் அறக்கட்டளையின் அறங்காவலரை 97872-57999 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT