நீலகிரி

அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்

DIN

பாதுகாப்புத் துறையில் மத்திய அரசின் போக்கைக்  கண்டித்து    அருவங்காடு  வெடிமருந்து  தொழிற்சாலை  ஊழியர்கள்,   மதிய உணவைப்  புறக்கணித்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.    
பாதுகாப்புத் துறையில் நூறு சதவீத  அன்னிய முதலீடு, தளவாடப்  பொருள்களைத்  தயாரிப்பதில் தனியார் நிறுவனங்களுக்கு  அனுமதி உள்ளிட்ட மத்திய அரசின் முடிவுகளுக்கு  எதிர்ப்புத் தெரிவித்து,  நீலகிரி மாவட்டம்,  குன்னூர் அருவங்காடு  வெடிமருந்து  தொழிற்சாலை ஊழியர்கள் 1,500-க்கும் மேற்பட்டோர்  செவ்வாய்க்கிழமை மதிய உணவைப் புறக்கணித்து  போராட்டத்தில்  ஈடுபட்டனர்.
இதில்,  ஐஎன்டியூசி, சிஎப்எல்யூ  உள்ளிட்ட   அனைத்துத் தொழிற்சங்கங்களைச்  சேர்ந்த தொழிலாளர்களும் கலந்து  கொண்டனர். மேலும்,  அருவங்காடு,  உதகை சாலையில்  கண்டனப்  பேரணியும்  நடைபெற்றது.
நாடு முழுவதும்,  நான்கு லட்சம்  தொழிலாளர்கள் மதிய  உணவைப் புறக்கணித்து  இப்போராட்டத்தில்  ஈடுபட்டதாக  சிஐடியூ தொழிற்சங்கத் தலைவர் அசோகன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT