நீலகிரி

பலத்த மழை: தாளவாடியில் வேகமாக நிரம்பும் வனக் குட்டைகள்

DIN

சத்தியமங்கலம் வனத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வனக் குட்டைகளில் தண்ணீர் நிரம்பி வழிகின்றன.
சத்தியமங்கலம், தாளவாடி வனப் பகுதியில் உள்ள தொட்டஹாசனூர், திகினாரை, பனஹள்ளி, பாளையம், சிக்கள்ளி, கொங்கள்ளி, அருள்வாடி பகுதியில் பலத்த மழை பெய்தது. இதையடுத்து, பல்வேறு அருவிகளில் இருந்து வரும் தண்ணீர் அங்குள்ள பள்ளத்தில் கலப்பதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. புதுவெள்ளத்தால் அருவிகளில் செந்நிறத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
வனத்தையொட்டி உள்ள பெரும்பாலான கசிவுநீர்க் குட்டைகளில் நீர் நிரம்பி வழிகின்றன. தாளவாடி - தலமலை வனச் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.
பல்வேறு ஓடைகளில் இருந்து வரும் வெள்ளநீர் பனஹள்ளி குட்டையில் சேர்வதால் குட்டையில் வெள்ளநீர் நிரம்பி வழிகிறது. பலத்த மழையால் மலைவாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வனக் குட்டைகளில் நீர் நிரம்பி வருவதால் வன விலங்குகள் அங்குள்ள வனக் குட்டைகளில் நீர் அருந்தி வருகின்றன. இதனால், வன விலங்குகள் குடிநீர்த் தேடி கிராமத்துக்குள் புகுந்துவிடும் பிரச்னைகள் குறைந்து வருகின்றன.
மேலும், விவசாய நிலங்களில் நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT