நீலகிரி

கூடுதல் ஏலத் தொகை: ஏலம் போகாத கோத்தகிரி பேருந்து நிலையம்

DIN

கோத்தகிரி பேரூராட்சிக்குச் சொந்தமான பேருந்து  நிலையத்தின் ஏலத் தொகை அதிகம் என்பதால் தொடர்ந்து  ஏலம் போகாமல் இருப்பது பேரூராட்சிக்கு வருவாய் இழப்பை  ஏற்படுத்தியுள்ளது.    
 கோத்தகிரி பேரூராட்சி சார்பில், பொது நிதி மூலம் ராம்சந்த் பகுதியில் இரண்டு ஏ.டி.எம். மையங்கள் கட்டப்பட்டிருந்தன. இந்த ஏ.டி.எம். மையங்களை எந்த வங்கியும் எடுக்க முன் வராத நிலையில் கடந்த வியாழக்கிழமை இந்த 2 ஏ.டி.எம் மையங்களையும் பொது ஏலத்தில்விட பேரூராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. மேலும், பேருந்து நிலைய பராமரிப்பு, நுழைவுக் கட்டண வசூல் உரிமையும் ஏலம் விடப்பட்டது.
 இதில், ஒரு கடையை அனுராதா என்பவர் மாத வாடகை ரூ. 10,100-க்கும், மற்றொரு கடையை முன்னாள் பேரூராட்சித் தலைவர் வாப்பு மாத வாடகை ரூ. 9,600-க்கும் ஏலம் கோரி எடுத்தனர். பேரூராட்சி சார்பில்  பேருந்து  நிலைய பராமரிப்பு, நுழைவுக் கட்டண ஏலத் தொகையாக  மாதம் குறைந்தபட்சம் ரூ.73 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், பேருந்து  நிலையத்தை ஏலத்தில் கலந்துகொண்ட 16 பேரில் ஒருவரும் ஏலம் கோராததால், பேருந்து நிலைய ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக செயல் அலுவலர் குணசேகரன் தெரிவித்தார்.
 பேருந்து நிலைய  ஏலம் ஒத்திவைப்பது இது மூன்றாவது முறையாகும். பேருந்து நிலையம்  தொடர்ந்து  ஏலம் போகாததால் பேரூராட்சி  நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு  ஏற்பட்டிருப்பதோடு, பேருந்து நிலைய பராமரிப்புப் பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள்  தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காப்பீட்டு சலுகைகள்!

3-ஆவது முறையாக விண்வெளி செல்லும் சுனிதா வில்லியம்ஸ்

சேலம் அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவ - மாணவியா் ஆா்வம்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

இந்தியன் வங்கி நிகர லாபம் 55% அதிகரிப்பு

SCROLL FOR NEXT