நீலகிரி

குன்னூரில் கடந்த ஆண்டைவிடதேயிலை மகசூல் அதிகரிக்க வாய்ப்பு

DIN

குன்னூரில் கடந்த ஆண்டை விட, நடப்பாண்டு மழையின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தேயிலை மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, உபாசி வேளாண் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி உதயபானு கூறியுள்ளார்.
இது தொடர்பாக, தேயிலை உபாசி வேளாண் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி உதயபானு கூறியதாவது:
குன்னூர் பகுதியில் கடந்த வாரம் முழுவதும் பெய்த தொடர்மழை, தேயிலை சாகுபடிக்கு மிகவும் உகந்ததாக உள்ளது. இந்தத் தொடர் மழையால் தேயிலை மகசூல் கடந்த ஆண்டை விட பல மடங்கு உயர வாய்ப்புள்ளது.
அதேசமயம் குன்னூர் நகராட்சியில் கடந்த காலங்களில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்ட போதும், மழை நீர் சேமிப்புக்கு தனியான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
பல்வேறு சிறிய தடுப்பணைகள் துர் வாரப்படவில்லை. மக்களிடையே மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. இதனால், தற்போது எதிர்பாராத அளவுக்கு மழை பெய்தும், நீரை சேமிக்க முடியாத நிலை நீடித்தது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உன் பார்வையில்..

இளைஞர் பலி: பம்மல் மருத்துவமனையை மூட உத்தரவு

நீலகிரியில் மே 10ல் உள்ளூர் விடுமுறை!

பிறந்தநாளில் இப்படியொரு போஸ்டரா? கவனம் ஈர்த்த அப்புக்குட்டி!

ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் தீ: 5000 கோழிகள் பலி - ரூ.10 லட்சம் இழப்பு

SCROLL FOR NEXT