நீலகிரி

டேன் டீ: தாற்காலிகத் தொழிலாளர்களை நிரந்தரமாக்க வலியுறுத்தல்

DIN

டேன் டீ தாற்காலிகத் தொழிலாளர்களை பணி நிரந்தரமாக்க வேண்டும் என சோஷலிச தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, சோஷலிச தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் வெற்றிவேல், டேன் டீ மேலாண்மை இயக்குநருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு கோத்தகிரி டேன் டீ தொழிலாளர்களுக்கு தினச் சம்பளமாக வழங்கப்படும் ரூ. 227.88-ஐ ரூ. 600-ஆக உயர்த்தவேண்டும். 2013 முதல் வழங்கவேண்டிய விடுப்பூதியம், மருத்துவ விடுப்பூதியம் மற்றும் பணிகொடைப் பலன்களை உடனடியாக வழங்கவேண்டும்.
டேன் டீ நிறுவனத்தில் 38 ஆண்டுகளாகத் தாற்காலிக ஊழியர்களாக பணிபுரிபவர்களைப் பணி நிரந்தரம் செய்வதுடன், இங்குள்ள மருத்துவமனைகளைத் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனையுடன் இணைத்து சிறப்பான சிகிச்சை கிடைக்கப்பெறச் செய்யவேண்டும்.
தமிழ்நாடு கூட்டுறவுச் சங்க விதிகள் - 1988-இன்படி கூட்டுறவுச் சங்கமாக டேன் டீ நிறுவனத்தைப் பதிவு செய்து, நிரந்தர மற்றும் தாற்காலிகத் தொழிலாளர்கள் அனைவரையும் உறுப்பினர்களாக்கி, 99 வருட குத்தகைக்கு ஒப்படைத்து தொழிலாளர்கள் மற்றும் டேன் டீ நிறுவனத்தைப் பாதுகாக்கவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT