எம்ஜிஆர் புகைப்படங்களை அளிக்கலாம்: ஆட்சியர் கோரிக்கை
உதகையில் டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு எம்ஜிஆர் தொடர்பான புகைப்படங்களை கொடுத்து உதவ வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கோரிக்கை விடுத்துள்ளார்.
உதகையில் டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு எம்ஜிஆர் தொடர்பான புகைப்படங்களை கொடுத்து உதவ வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் அவரது சிறப்பு வாய்ந்த மற்றும் அரிய புகைப்படங்கள் இடம் பெற உள்ளன.
எனவே, நீலகிரி மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் தங்களிடம் எம்ஜிஆரின் அரிய புகைப்படங்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை உதகையிலுள்ள மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். அதேபோல, எம்ஜிஆருடன் நேரடியாகப் பழகிய அனுபவம் எவருக்கேனும் இருந்தாலும் அவர்களும் இந்த அலுவலகத்துக்கு வந்து அவற்றை பகிர்ந்து கொள்ளலாம் எனவும், இதற்கான கூடுதல் விவரங்களுக்கு 0423-2443820, 94980 42445 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.